மாடித்தோட்டப் பிரியரா நீங்கள்?.. உங்களுக்கான தகவல் இதோ !!

மாடித்தோட்டப் பிரியரா நீங்கள்?.. உங்களுக்கான தகவல் இதோ !!

செடிகள் வளர்வதற்கு சிறிது மண்ணும், குப்பையும் இருந்தால் போதும். அது மொட்டை மாடியாகவே இருந்தாலும் செடிகள் அருமையாக வளர்ந்து விடும். அவ்வாறு செடிகளை மொட்டை மாடியில் வைத்து வளர்ப்பது தான் மாடித்தோட்டம். மாடித்தோட்டத்தின் மூலம் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும். அதனால் தற்பொழுது மாடித்தோட்டம் அமைப்பது பெருகி வருகிறது. மாடித்தோட்டம் அமைப்பதிலும் சில அடிப்படையான வழிமுறைகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றினால் மாடித்தோட்டம் அமைப்பது மிகவும் எளிது.
மாடித்தோட்டம் அமைக்கும் முறை :

� மாடித்தோட்டம் அமைக்க முதலில் பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். அதாவது கோடைக்காலம் முடிந்து ஜூன், ஜூலை மாதங்களுக்கு மேல் தோட்டம் அமைப்பது நல்லது.

� அடுத்த முக்கியமான பகுதி செடிகளை வளர்க்கும் இடத்தை தேர்வு செய்வது தான். நாம் தேர்வு செய்யும் இடமானது குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும்படி இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.

� விதைக்க வேண்டிய காய்கறியை தேர்வு செய்த பிறகு அதற்கு தேவையான உபகரணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

� தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.

� தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம். தொட்டி, பாலிதின் பை, நேரடியாக நிலத்தில் என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளவது அவசியம்.

� நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில் அல்லது நிலத்தில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க வேண்டாம்.

� 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் நிச்சயம்.

� ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும்.

� நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சண கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து நன்கு கிளறிவிட வேண்டும்.

� பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.

� கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி போன்ற பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும். வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.

� பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும்.

� வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளித்தால் பூச்சி தாக்குதலில் இருந்து செடிகளைப் பாதுகாக்க முடியும்.

� கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.

All comments

  1. Sankar

    100 nos

  2. Raghumunuswamy Gunashekar

    Your well jobbing

  3. Venkatesan

    Good

Leave a Reply

Product added to compare.